
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 93 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 157 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 251 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டர்கள் மீண்டும் சொதப்பியதன் காரணமாக அந்த அணி 123 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.