
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அஹ்மதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு பேட்டி அளித்த ஸ்மித், இந்தியாவை எதிர்கொள்வது குறித்து பேசினார். அப்போது ஸ்மித் இடம் இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்மித், “இது ஒரு நல்ல கேள்வி. ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை. இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் சிறந்த அணியாக விளங்குகிறது. அவர்கள் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் முடியும். மேலும் நாங்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் முன் விளையாடப் போகிறோம். அது நிச்சயம் ஒரு சிறந்த சுற்றமாக இருக்கும். அந்தப் போட்டியை எதிர்நோக்கி நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.