டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் பலம், பலவீனம் குறித்து வாட்சன் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் இறுதிக்கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் சுற்று நாளை முதல் தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பையை வெல்லும் அனைத்து திறமையும் இந்திய அணிக்கு உள்ளது. ரோகித் ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன். உலகத்திலே தற்போது சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்குகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரது தலைமையில் வெற்றிக் கரமாக கோப்பையை வென்றிருக்கிறது.இதனால் கேப்டன் பொறுப்பை எப்படி கையாள வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளம் அவருடைய பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியின் முக்கிய குறையாக பந்துவீச்சை பார்க்கிறேன். அதிலும் இறுதி கட்டங்களில் இந்திய பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறுகின்றனர். இதற்கு ஆர்ஸ்தீப் சிங்கை வைத்து இந்திய அணி சரி கட்டலாம். ஆர்ஷ்தீப் ஐபிஎல் போட்டிகளில் யாக்கர்களை சிறப்பாக வீசினார்.
அவருக்கு ரன்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிகிறது. அவருடைய பந்துவீச்சு ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சிறப்பாக எடுபடும். இதேபோன்று புவனேஸ்வர் குமாரும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் சிறப்பாக பந்துவீச வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் அவருடைய பந்துவீச்சில்சிக்ஸர்கள் அடிக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியா மைதானங்கள் பெரியது என்பதால் இதனை பயன்படுத்தி புவனேஸ்வரகுமார் விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்று இந்திய அணியில் அக்சர்பட்டேல், சாகல் என இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். விராட் கோலியும்தற்போது பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சிறப்பான இன்னிங்ஸை அவர் விளையாடினார். எதிரணியிடமிருந்து தினேஷ் கார்த்திக் வெற்றியை பறித்து வருகிறார். பினிஷர் ரோலுக்கு தினேஷ் கார்த்திக் தான் தற்போது சிறந்த நபராக விளங்குகிறார்.
ரிஷப் பந்தாலு அப்படி ஒரு இன்னிங்ஸை ஆட முடியும். ஆனால் அவர் நடுவரிசை வீரராக தான் திகழ்கிறார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மேட்ச் வின்னர் ஆக இருக்கிறார். டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று தரக்கூடிய ஒரு வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். பந்துவீச்சில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஹர்திக் பாண்டியா வீசுவது அவருக்கு கூடுதல் பலனை தரும். இதன் மூலம் ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளை எடுக்க முடியும். பேட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now