
வங்கதேச அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் நவம்பர் 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முடிவடையவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், முகமது நபி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நூர் அஹ்மத் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.