சேவாக் சாதனையை முறியடித்த ஷர்துல் தாக்கூர்!
சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரை சதம் விளாசி அசத்தினார்.
Trending
ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வெறியேற்ற, மறுமுனையில் ஷர்துல் தாகூர் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.
இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியின் மூலம் ஷர்துல் தாகூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணி வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக கபில்தேவ் திகழ்கிறார்.
கபில்தேவ் 1982 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக் கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 பந்துகளில் அரைசதம் கடந்து இருந்தார். இதுதான் டெஸ்ட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதமாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் சேவாக்கின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஷர்துல் தாகூர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now