
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்த அணியில் அஜிங்கியா ரஹானே, சர்ஃப்ராஸ் கான், ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடாத முஷீர் கானுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் இளம் தொடக்க வீரரான ஆயூஷ் மாத்ரேவும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.