
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவுள்ளது. 16 முதல் 22ஆம் தேதிவரை தகுதிச் சுற்று ஆட்டங்களும், 23ஆம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அணியில் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு துறைதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு சரியான மாற்று வீரர் இல்லாமல்தான் ஆஸிக்கு இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது.
பும்ராவுக்கு மாற்றாக ஷமி இரண்டு நாட்களில் ஆஸிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்தூல் தாகூர், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரும் இடம்பெறாதது தனக்கு அதிருப்தியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.