ஐபிஎல் 2023: டெல்லியிடமிருந்து ஷர்தூல் தாக்கூரை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஷர்தூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணியில் சேர்த்துள்ளது.
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனனுக்காக ஆரம்ப பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Trending
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம் ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்திற்கு முன் ஷர்தூல் தாக்கூரை அணியில் சேர்த்துள்ளது. ஆனால் அவரை எந்த விலைக்கு வாங்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. முன்னதாக ஷர்தூல் தாக்கூரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐபிஎல் 2023ஆம் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சாம் பில்லிங்ஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோர் பங்கேற்க போவதில்லை என்ற தகவலும் வெளியுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் தற்போது கேகேஆர் அணி ஷர்தூல் தாக்கூரை ஏலத்தில் எடுத்துள்ளது.
அதேசமயம் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்சும் அடுத்த சீசனில் விளையாடப்போவதில்லை என்பதால், குஜராத் அணியிடமிருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ், லோக்கி ஃபர்குசன் ஆகியோரையும் கேகேஆர் அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now