மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட ஷஷாங்க் சிங் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையாடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் சிங் மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை மயங்க் யாதவ் வீசிய நிலையில், ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட ஷஷாங்க் சிங் டீப் பேக்வர்ட் ஸ்கெயர் லெக் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். மேலும் அந்த சிக்ஸரானது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. இந்நிலையில் ஷஷாங்க் சிங் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fetch that one from the mountainsShashankSingh lights up Dharamsala with a monstrous six. Power-hitting at it39;s finest
Watch the LIVE action in BHOJPURI https://t.co/Iz9KWvDwyp IPLRace2Playoffs PBKSvLSG | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star… pic.twitter.com/C24qxSp4lEmdash; Star Sports (StarSportsIndia) May 4, 2025பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வி.கே), ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இம்பாக்ட் வீரர்கள்: விஜய்குமார் வைஷக், ஹர்பிரீத் ப்ரார், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (வாரம்/சி), அப்துல் சமத், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், ஆகாஷ் மகராஜ் சிங், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.
Also Read: LIVE Cricket Score
இம்பாக்ட் வீரர்கள்: ரவி பிஷ்னோய், மிட்செல் மார்ஷ், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, ஷாபாஸ் அகமது.
Win Big, Make Your Cricket Tales Now