SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்களை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடிய மூன்று நட்சத்திர வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்ற சஞ்சு சாம்சனிற்கு டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
அதேசமயம் கடந்த ஒன்றைரை ஆண்டுகலாமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணி தேர்வாளர்கள் மீண்டும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ்ருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த மூன்று வீரர்களின் நீக்கமானது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வை காங்கிரஸ் கட்சியின் லோக் சபா உறுப்பினர் சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் தேர்வானது சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல நடந்து முடிந்த ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான அபிஷேக் சர்மா சதமடித்திருந்த நிலையிலும் அவரை டி20 அணியில் சேர்க்கவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. ஆனாலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இவரது பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Interesting squad selection for India’s tour of Sri Lanka later this month. @IamSanjuSamson, who hit a century in his last ODI, has not been picked for ODIs, while @IamAbhiSharma4, who hit a T20I century in the #INDvZIM series, has not been picked at all. Rarely has success in… pic.twitter.com/PJU5JxSOx2
— Shashi Tharoor (@ShashiTharoor) July 18, 2024
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்தியா vs இலங்கை அட்டவணை
- ஜூலை 27- முதல் டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- ஜூலை 28- இரண்டாவது டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- ஜூலை 30- மூன்றாவது டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- ஆகஸ்ட் 2 - முதல் ஒருநாள் போட்டி, ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
- ஆகஸ்ட் 4 - இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
- ஆகஸ்ட் 7 - மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
Win Big, Make Your Cricket Tales Now