
Shaw, Suryakumar To Join Indian Team For England Tests (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் விளைவாக, அவர்கள் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களை விடுவித்து கூடுதல் வீரர்களை சேர்த்து பிசிசிஐ புதிய அணியை அறிவித்துள்ளது. இதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.