
இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது. இந்தத் தொடர் மற்ற தொடர்களை போன்று இல்லாமல் பெரும்பாலான இளம் வீரர்களை கொண்டு நடைபெறுவதால் இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது என்பதை சோதிப்பதற்கும் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து விடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தொடரில் இடம் பெற்ற இளம் வீரர்கள் பலர், தங்களுடைய எதிர்பார்ப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதன்முறையாக சர்வதேச இந்திய அணி இடம் பிடித்திருக்கும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மவி, இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்தும் தான் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.