Advertisement

விராட் கோலியின் ஃபார்ம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒற்றைவரியில் பதிலளித்த சோயப் அக்தர்!

விராட் கோலி பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு தரமாக பதிலளித்தார் சோயப் அக்தர்.

Advertisement
Shoaib Akhtar's response to fan question related to Virat Kohli winning hearts
Shoaib Akhtar's response to fan question related to Virat Kohli winning hearts (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 25, 2022 • 10:08 PM

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 25, 2022 • 10:08 PM

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார். 

Trending

ஐபிஎல்லில் சரியாக ஆடாத விராட் கோலி மீது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் சொதப்பினார். 

அஸ்வினை டெஸ்ட் அணியில் புறக்கணிக்க முடியும் என்றால், கோலியை டி20 அணியில் புறக்கணிக்க முடியாதா என்று கபில் தேவ் கேள்வியெழுப்பியிருந்தார். ஃபார்மில் இல்லாத கோலியை பிடித்து தொங்குவதற்கு பதிலாக ஃபார்மில் உள்ள வீரரை அணியில் எடுக்கவேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.

விராட் கோலி மீது கடும் விமர்சனங்களும் கடுமையான பார்வைகளும் முன்வைக்கப்பட்டாலும், கேப்டன் ரோஹித் சர்மாவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

விராட் கோலி மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை முன்வைக்கும் அதேவேளையில், சில முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவாகவும் உள்ளனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர். ஏற்கனவே அண்மையில், விராட் கோலிக்கு ஆதரவாக அக்தர் பேசியிருந்தார்.

இந்நிலையில், இப்போது ஃபார்மில் இல்லாத கோலிக்கு ஒரு வார்த்தையில் என்ன கூறுவீர்கள் என்று ரசிகர் ஒருவர் அக்தரிடம் ட்விட்டரில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அக்தர், “அவர் ஏற்கனவே லெஜண்ட்” என்று பதிலளித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement