
டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ராவைத்தான் இந்திய அணி வேகப்பந்து வீச்சில் அதிகமாக சார்ந்திருக்கிறது. பும்ரா தான் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். அவர் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாததால் தான், டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கி ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றது.
ஆனால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடிய பும்ரா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவரது முதுகு பிரச்னை காரணமாக மீண்டும் காயத்தால் அவதிப்படும் அவர், தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். டி20 உலக கோப்பையிலிருந்தும் பும்ரா விலகியுள்ளார்.