
வங்கதேச அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. கடைசி போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்துக்கு கொடுக்கப்பட்ட அவுட், அவர் களத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம் மற்றும் போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் அவர் நடந்து கொண்ட விதமும் சர்ச்சையானது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சில போட்டிகளில் இது போல நடக்கும். அது நமக்கு மகிழ்வை தராது. அதுவும் இந்த தொடரில் டிஆர்எஸ் இல்லை. நடுவர்கள் சில முடிவுகளை எடுக்கும் போது அது சிறப்பான முறையில் இருக்க வேண்டும். சில முடிவுகளில் இரண்டாவது முறையாக யோசிக்க வேண்டி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் யோசிக்காமல் கொடுக்கப்பட்ட அவுட் அது.