Advertisement

INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 25, 2023 • 02:12 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 25, 2023 • 02:12 PM

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 28ஆம் தேதியும், டி20 தொடர் ஜனவரி 5ஆம் தேதி முதலில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்த அணியில் ஸ்மிருதி மந்தனா துணைக்கேப்டனாக அணியை வழிநடத்தவுள்ளார்.

Trending

மேலும் இந்திய ஒருநாள் அணியில் ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக் மற்றும் டைட்டாஸ் சாது ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்து ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேனுகா சிங், தீப்தி சர்மா, பூஜா வஸ்திரேகர் போன்ற நட்சத்திர வீராங்கனைகளும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், ஸ்நே ராணா மற்றும் ஹர்லீன் தியோல்.

இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா மற்றும் மின்னு மணி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement