
Shreyas Iyer and other Delhi Capitals players dance to Vaathi Coming in viral video (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்19ஆம் தேதி தொடங்குகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது.
இது ஒருபுறமிருக்க, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தான் முதலிடத்தில் இருக்கிறது.