
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார்.
இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் மிகப்பெரிய இரண்டு தொடர்களை அவர் சந்திக்க இருக்கிறார். ஒன்று ஐபிஎல் தொடர் அதனைத் தொடர்ந்து உலக கோப்பை டி20 தொடர் இந்த இரண்டு தொடர்களிலும் அவர் அணியில் முக்கிய வீரராக திகழ்வார்.