
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூடா அபார ஆட்டத்தை வெளிப்பாடுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், விராட் கோலியுடன் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இமாலய சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தில் ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 31ஆவது ஓவரை பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆக வீசிய நிலையில், அந்த ஓவரை ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்டார்.
SHREYAS IYER WITH A 102M SIX. pic.twitter.com/fN5AVHszJU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025