வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் விளாசி இருந்தார். தற்போது சீனியர்கள் இல்லாத நிலையில், நடுவரிசை ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்டையும் நம்பியே உள்ளது.
முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விட்ட கேட்ச் தான், ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று சிரமப்படுவதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிக்கல் இல்லை. ஆனால் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் வழியை கண்டு பிடிக்க வேண்டும்.
வேகப்பந்துவீச்சில் ரன்களை அடிக்கும் வகையில் சில ஷாட்களை அவர் பயிற்சி செய்து விளையாட வேண்டும். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, ஸ்டம்பிலிருந்து நகர்ந்து ஆஃப் சைடு வரும் பந்தை அடிக்க முயற்சி செய்கிறார். அது மட்டும் போதாது என்பது தான் என் கருத்து.
ஸ்ரேயாஸ் ஐயர் 4ஆவது பேட்டிங் செய்யும் போது வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சில ஷாட்களை ஆட முயற்சித்தால் கூடுதலாக ஒரு 10, 15 ரன்கள் கிடைக்கும். இது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now