ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது காயமடைந்து அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதனால் நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாததால், இலங்கை அணிக்கெதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் ராயல் லண்டன் கோப்பை எனப்படும் இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் லங்கஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், தற்போது ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இத்தகவலை லங்கஷையர் அணியும் உறுதிசெய்துள்ளது. இருப்பினும், ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now