
ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஷார்ட் பந்துகளை அடிக்க முயற்சி செய்து தன் விக்கெட்டை பறி கொடுத்து வந்தார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அதே போல் விளையாடிய 4 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு பயிற்சி அளித்தார்.
நிறைய ஷார்ட் பந்துகளை சந்தித்து ஸ்ரேயாஸ் வலைப் பயிற்சி மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் டிராவிட் தானே முன்வந்து த்ரோடவுன் பயிற்சியை அவருக்கு வழங்கினார். இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக ஷார்ட் பந்துகளை சமாளித்து, அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார்.
போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்ற போது, அவரிடம் "அடுத்து தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா ஆட உள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிக ஷார்ட் பந்துகளை வீசுவார்களே. அதை எப்படி எதிர்கொள்ள தயாராகி இருக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார் ஒருவர். அதைக் கேட்ட உடன் ஸ்ரேயாஸ் ஐயர், "அது பிரச்சனை என்று கூறுகிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?' என திருப்பி கேட்டார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர், "நான் பிரச்சனை என சொல்லவில்லை. ஆனால்ம் ஷார்ட் பந்துகள் உங்களுக்கு தொந்தரவாக உள்ளது" என்றார்.