
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் இருமுறை சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
மேலும் கடந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயார் ஐயர், நடப்பு சீசனில் விளையாடுவது உறுதியாகியதுடன் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
ஏற்கெனவே முதுகுபகுதியில் காயமடைந்து அதிலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மீண்டும் முதுகுபகுதியில் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாளகளே உள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ளது கேகேஆர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.