
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்சத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அணிக்கு தேவையான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது, ஆனால் எங்களுடைய பேட்டிங் தான் மோசமாக இருந்தது. இப்போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். அதிலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை.