
தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து, எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜோ ரூட் தலைமையில் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்ததும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை அதிரடியாக மொத்தமாக மாறியது. இன்று டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியமான ஒன்றாக இவர்கள் மாற்றி இருக்கிறார்கள்.
மெக்கல்லம் இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து ஒரு சீசனில் அந்த அணியை இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அவர் விரும்பியபடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடக்கூடிய அணியை உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக அழைப்பு விடுக்க அதை அப்படியே அவர் ஏற்றுக் கொண்டார்.