
India Probable Playing XI For Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனில், தொடக்க வீரராக சுப்மன் கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதன் காரணமாக இந்த சிறப்பு கட்டுரையின் மூலம் இந்த போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சுப்மன் கில் துணைக்கேப்டனாக இருப்பதால் அவரை லெவனில் இருந்து நீக்குவது கடினமாகும்.