ஷுப்மன் கில் இந்திய அணிக்கான வெற்றிகரமான வீரராக இருப்பார் - கேரி கிரிஸ்டன்!
ஷுப்மன் கில் அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயம் அற்றது என குஜராத் அணியின் பயிற்சியாலர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரராக ஷுப்மன் கில் இருக்கிறார். கடந்த ஆண்டின் இறுதியிலும், இந்த ஆண்டிலும் மிகச் சிறப்பான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒருநாள் கிரிக்கெட் சதம், ஒருநாள் கிரிக்கெட் இரட்டைச் சதம், டி20 கிரிக்கெட் சதம், டெஸ்ட் கிரிக்கெட் சதம், ஐபிஎல் சதம் என எல்லா விதமான சதங்களும் அவருக்கு இந்திய மண்ணில் கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 17 ஆட்டங்களில் 890 ரன்களை மூன்று சதங்களுடன் குவித்து அட்டகாசப்படுத்தினார்.
அவரது தொடர் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக சச்சின் மற்றும் விராட்கோலி உடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். இது குறித்து ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கூறும்பொழுது “அவர் ஒரு இளம் வீரர். உலகின் தலைசிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று நம்ப முடியாத வகையில் திறமையும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர். அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயம் அற்றது.
Trending
அவர் முழுவதுமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கான வெற்றிகரமான வீரராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். தற்காலத்தில் குறிப்பாக டி20 கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அவர் உலகில் உள்ள சில திறமையான வீரர்களில் ஒருவர். தற்போது அவர் மூன்று வடிவங்களிலும் சமமாகத் திறம்பட செயல்பட முடியும் என்று நிரூபித்துள்ளார். உலகின் சிறந்த பந்துவீச்சை சமாளிக்கும் நுட்பம் கொண்டவர். அவர் சமமாக நன்றாக விளையாடுகிறார். ரன் தேவைப்படும்போது முன் மற்றும் பின் கால்களில் அவரால் ரன்கள் கொண்டுவர முடியும்.
அனைத்து வடிவங்களிலும் சிறந்த வீரராக மாறுவதற்கு அவரிடம் திறமைகள் இருக்கிறது. இவரும் மற்ற வீரர்கள் போலவே சவால்களையும் தடைகளையும் சந்திப்பார். அதை அவர் எப்படி கையாளுகிறார்? தொடர்ந்து எப்படி முன்னேறுகிறார்? என்று பார்க்க வேண்டும். இதுவே அவரது நீண்ட கால வெற்றியை உறுதி செய்யும். அவரிடம் தலைவர் ஆவதற்கான தகுதிகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். அவருக்கு விளையாட்டு பற்றிய நல்ல புரிதலும் அறிவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now