ஷுப்மன் தங்கையிடம் அத்துமீறிய ஆர்சிபி ரசிகர்கள்!
ஆர்ச்பி அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்து குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நிலையில், அவரது தங்கையின் சமூக வலைதளங்களில் சில அபாசமான கருத்துகளை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Trending
இந்நிலையில், தற்போது உள்ள ரசிகர்கள் சகிப்புத்தன்மை சுத்தமாக இல்லாத தலைமுறையினராக மாறி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் போட்டியில் முன்பெல்லாம் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் எதிர்தரப்பில் இருந்தும் கூட பாராட்டுவார்கள். அவ்வளவு ஏன் எதிரி நாடாக பார்க்கப்படும் பாகிஸ்தானில் இருந்து சையது அன்வர் 194 ரன்கள் விளாசிய போது அவருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்து பாராட்டியது நமது ரசிகர்கள் தான்
ஆனால் தற்போது காலம் மாற மாற கலாச்சாரமும் சீரழிந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வென்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்க முடியும். ஆனால் ஷுப்மன் கில் தனி ஆளாக நின்று 52 பந்துகளில் 114 ரன்கள் விளாசி குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இது குறித்து பாராட்டிய கவாஸ்கர் ஆர் சி பி அணி இந்த தோல்வி குறித்து மனம் வருந்தக்கூடாது. ஏனென்றால் ஒரு சிறந்த திறமை வாய்ந்த வீரரிடம் தான் நாம் தோற்று இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். கோலி கிங் என்றால் ஷுப்மன் கில் இளவரசன் என்று இயன் பிஷப் பாராட்டினார்.
இந்த நிலையில் ஷுப்மன் கில், இந்த சதத்தால் தான் நாம் தோற்றுப் போய் விட்டோம் என எண்ணிய ஆர்சிபி ரசிகர்கள் அவருடைய சகோதரியிடம் அநாகரீகமான முறையில் சமூக வலைத்தளத்தில் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகு ஷுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டிருந்தார்.
அதற்கு அவருடைய சகோதரி மை பேபி என்று பாராட்டி இருந்தார். இதற்கு கீழ் படிக்கவே முடியாதபடி பல்வேறு மூன்றாம் தர கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். ஷுப்மன் கில் தங்கையை எப்படி எல்லாம் கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து இருந்தார்கள். மேலும் சிலர் ஒரு படி மேல் பொய் ரிஷப் பன்ட் கார் விபத்தில் சிக்கியதற்கு பதில் இவர் சிக்கி இருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இந்த சமூக வலைத்தள பதிவை பார்த்து கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். ஷுப்மன் கில் சகோதரியிடம் அத்துமீறிய ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now