
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹாவும் – சுப்மன் கில்லும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விர்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கூட்டணி சேர்ந்த சுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு அசுரவேகத்தில் ரன்னும் குவித்தார்.
32 பந்துகளில் அரைசதம் அடித்த ஷுப்மன் கில் அடுத்த 17 பந்துகளில் அதவாது 49வது பந்தில் சதமும் அடித்து, நடப்பு தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த பின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத சுப்மன் கில் மொத்தம் 60 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.