Advertisement
Advertisement
Advertisement

ஷுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறுவார் - கிரேக் சேப்பல்!

ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக ஷுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 03, 2023 • 20:04 PM
Shubman Gill will struggle in English conditions if the Australians bowl well: Greg Chappel
Shubman Gill will struggle in English conditions if the Australians bowl well: Greg Chappel (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன . 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் தோல்வியடைந்தது .

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்தியா . இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சிகர்களிடமும் இருந்து வருகிறது . ஆனால் ஆஸ்திரேலியா அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது . அந்த அணியின் மிச்சல் ஸ்டார்க் ஜோஸ் ஹேசல்வுட் போலான்ட் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் .

Trending


இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கே உதவும் வகையில் இருக்கும் என்பதால் இது ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு சாதகமானதாகவே கருதப்படுகிறது . இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை கடந்த டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி, ஷுப்மன் கில்  ஆகியோர் சிறப்பாக விளையாடினர் . அஜிங்கிய ரஹானே மீண்டும் அணியில் இடம் பெற்று இருப்பது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது .

இந்நிலையில் ஷுப்மன் கில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 890 ரகளை குவித்து ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் . இந்திய அணியின் அடுத்த விராட் கோலி ஆக அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . சமீபத்திய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரருமான கிரேக் சேப்பல் மற்ற வீரர்களை போல ஷுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறுவார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் .

இதுகுறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில்லின் பேட்டிங்கில் ஒரு சில குறைகளை கண்டேன் . அதனை ஆஸ்திரேலிய வீரர்களும் கவனித்து இருப்பார்கள் என நினைக்கிறேன். அதிகமான வேகம் மற்றும் சரியான லென்த்தில் பந்து வீசும் அதன் மூலம் அவரை எளிதாக ஆட்டமிழக்க செய்யலாம் . ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக ஷுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கில் ஒரு திறமையான வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இந்தியா இளம் வீரர்களை நன்றாக உணர்த்துகிறது . சுப்மன் கில் போன்ற ஒரு வீரர் 22 வயதிலேயே ஏராளமான சர்வதேச கிரிக்கெட் அனுபவங்களை வைத்திருக்கிறார் . இருந்தாலும் அவரது ஆட்டத்தில் ஒரு சில மிகச்சிறிய குறைகள் இருக்கின்றன . அது இங்கிலாந்தின் சீதோசன நிலையில் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார் .


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement