இந்தியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - வாசீம் அக்ரம்!
இந்திய அணியின் உலகக்கோப்பை தோல்விக்கான முக்கியம் காரணம் ஐபிஎல் தான் என வாசீம் அக்ரம் கூறியுள்ள கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இந்த தோல்வியின் மூலம் டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் 15 வருட கனவு மீண்டும் கனவாகவே நீடித்து வருகிறது. அடுத்த தொடருக்குள் பல வீரர்கள் ஓய்வை அறிவிக்கலாம்.
இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என பல்வேறு விவாதங்கள் இணையத்தில் வெடித்து வருகின்றன. இந்தியாவின் மோசமான பவுலிங் மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி ஆகியவை தான் காரணம் என ஒருபுறமும், ஆஸ்திரேலிய களத்தை இந்திய வீரர்கள் புரிந்துக்கொள்ளாததும் தான் காரணம் என மற்றொருபுறமும் வெடித்து வருகிறது.
Trending
இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து வசீம் அக்ரம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணி நிறைய பலன்களை பெறுகிறது என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. இந்திய அணி முதல்முறையாக 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. ஐபிஎல் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. எனவே ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தான் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவு தகர்ந்து வருகிறது.
இந்திய வீரர்கள் அயல்நாட்டு தொடர்களில் பங்கேற்று விளையாடினால், உலகக்கோப்பையில் எளிதாக அயல்நாட்டு களங்களை சமாளிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஐபிஎல்-ஐ மட்டுமே நம்பியிருந்தால், அதுவே இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமாக அமையும்” என கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இந்திய அணி ஒவ்வொரு முறையும் சொதப்பும் போதெல்லாம், ரசிகர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல் பக்கம் திரும்புகிறது. அந்தகவகையில் இந்த முறையும் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயமடைந்ததற்கு ஐபிஎல் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தது. 2 மாதங்கள் ஐபிஎல்-ல் விளையாடும் அவர்கள், சர்வதேச போட்டிகளில் ஒரு தொடரில் ஆடினாலும் ஓய்வு கேட்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது
Win Big, Make Your Cricket Tales Now