டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டிம் டேவிட்டுக்கு இடம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் மீண்டும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. பிரதான சுற்று வரும் 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது.
இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தற்போது தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
இந்த அணியில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கிறார். முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கும் தேர்வுக்குழுவினர் டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
ஆனால், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சேர்க்கப்பட்டுள்ளனர். மேத்தீவ் வெட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இம்முறை நடுவரிசையில் களமிறங்குகிறார்.
சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட், உலகம் முழுவதும் உள்ள டி20 தொடரில் விளையாடி பிரபலம் அடைந்ததன் மூலம் தற்போது அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார். முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளராக ஆடம் ஸாம்பா, ஆஸ்டன் ஆகர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளராக மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த முறை டி20 உலகக் கோப்பை வென்ற 14 வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் ஸவாப்சனுக்கு பதில் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார்.
இதே அணி தான் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வார்னருக்கு ஒய்வு வழங்கப்பட்டு கமரூன் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல்,ஸ்டார்க், ஸ்டோனிஸ், மேத்தீவ் வெட், டிம் டேவிட், கம்மின்ஸ் ஆடம் சாம்பா, ஆஸ்டர் அகார், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன்.
Win Big, Make Your Cricket Tales Now