Advertisement

சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் - விராட் கோலி

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Advertisement
Siraj will always be 'in your face' kind of bowler, he won't take backward step, says Kohli
Siraj will always be 'in your face' kind of bowler, he won't take backward step, says Kohli (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 24, 2021 • 10:31 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 24, 2021 • 10:31 PM

இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என தெரிவித்துள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய கோலி, "சிராஜை நன்கு தெரியும் என்பதால் அவரது முனைப்பைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. அவர் எப்போதும் திறனுள்ள பந்துவீச்சாளர். அவருடையத் திறனை ஆதரிக்க நம்பிக்கை வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எந்தவொரு நிலையிலிலும் எந்தவொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அவர் செய்வதன் பலன்களைப் பார்க்கலாம்.

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

அவரிடம் எப்போதுமே திறன் உள்ளது. நம்பிக்கையும், செயல்படுத்தும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இதுமாதிரியான பந்துவீச்சாளராகத்தான் இருக்கப்போகிறார். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். அவர் பின்வாங்கப்போவதில்லை" என தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement