Advertisement
Advertisement
Advertisement

சூர்யகுமார் யாதவை பாராட்டிய விராட் கோலி!

சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறமையை சீனியர் வீரர் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2022 • 19:54 PM
Skill, power, wristwork and invention: India thrive on the Kohli-Suryakumar show
Skill, power, wristwork and invention: India thrive on the Kohli-Suryakumar show (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்ல வீரர் என்பதால் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார் சூர்யகுமார் யாதவ். மிகச்சிறந்த திறமைசாலியான இவர், செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் செய்துவருகிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்வார். 

இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால் சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவேண்டும். அந்தளவிற்கு முக்கியமான வீரராக வளர்ந்துள்ளார். அண்மைக்காலமாக செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் செய்துவரும் விராட் கோலி, இங்கிலாந்தில் டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். ஆசிய கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். 

Trending


மூன்றாம் வரிசையில் இறங்கும் சீனியர் வீரர் விராட் கோலியுடனான சூர்யகுமார் யாதவின் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, கோலி - சூர்யகுமார் யாதவ் இடையேயான 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 69 ரன்களையும், கோலி 48 பந்தில் 63 ரன்களையும் குவித்தனர். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடியபோது, கோலி அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்ததும், இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதல் மற்றும் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.

இந்நிலையில், போட்டிக்கு பின் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து பேசிய விராட் கோலி, “என்ன செய்யவேண்டும், எப்படி ஆடவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். எந்தவிதமான கண்டிஷனிலும், ஆட்டத்தின் எந்தவிதமான சூழலிலும் ஆடவல்ல வீரர். அதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இங்கிலாந்தில் அபாரமாக பேட்டிங்  ஆடி சதமடித்தார்.  

ஆசிய கோப்பையிலும் அருமையாக ஆடினார். கடந்த 6 மாதங்களாக வேற லெவலில் ஆடிவருகிறார். எல்லா விதமான ஷாட்டுகளையும் ஆடுகிறார். ஆனால் எந்த ஷாட்டை எப்போது ஆடவேண்டும் என்ற அவரது தெளிவுதான், அவரது மிகப்பெரிய திறமையே. அவர் ஆடுவதை பார்க்க அருமையாக இருக்கும்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement