
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் நாளை தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வார்னர், ஸ்மித், லபுசாக்னே, டிராவிஸ் ஹெட், கவாஜா, ஹேசில்வுட், நாதன் லயன் என்று நட்சத்திர பட்டாளங்களை கொண்டுள்ளது. கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை சமாளிப்பது கடினம் தான். ஷமார் புரூக்ஸ், பிளாக்வுட், ஹோல்டர், கைல் மேயர்ஸ் உள்ளிட்டோர் கைகொடுத்தால் தாக்குப்பிடிக்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வார்னர், ஸ்மித், லயான், ஸ்டார்க், ஹேஸ்லேவுட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.