Advertisement

Emerging Asia Cup 2024: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
Emerging Asia Cup 2024: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 26, 2024 • 01:30 PM

SL-A vs AFG-A Final  ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 26, 2024 • 01:30 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இத்தொடரில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஏ அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணியும், இப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பாட்டத்தை வெல்லும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இப்போட்டியில் விளையாடும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending

SL-A vs AFG-A Final: Match Detail

  • மோதும் அணிகள் - இலங்கை ஏ vs ஆஃப்கானிஸ்தான் ஏ
  • இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
  • நேரம் - அக்.27 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)

SL-A vs AFG-A Final: Pitch Report

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது அல் அமேரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 103 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 43 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 59 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 148 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 220 ரன்களாக இருக்கிறது. இதனால் நிச்சயம் பேட்டர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

SL-A vs AFG-A Final: Live Streaming Details

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். மேற்கொண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka A vs Afghanistan A Possible XIs 

Sri Lanka A Probable Playing XI: யசோதா லங்கா, லஹிரு உதார, நுவனிது ஃபெர்னாண்டோ (கே), சஹான் ஆராச்சிகே, பவன் ரத்நாயக்க, ரமேஷ் மெண்டிஸ், அஹான் விக்ரமசிங்க, துஷான் ஹேமந்த, நிமேஷ் விமுக்தி, நிபுன் ரன்சிகா, எஷான் மலிங்க

Afghanistan A Probable Playing XI : செதிகுல்லா அடல், ஜுபைத் அக்பரி, ஷரபுதீன் அஷ்ரஃப், நுமன் ஷா, தர்வீஷ் ரசூலி (கே), கரீம் ஜானத், அல்லா கசன்பர், கைஸ் அஹ்மத், ஃபரிதூன் தாவூத்சாய், பிலால் சாமி, ஷாஹிதுல்லா கமால்

SL-A vs AFG-A Final Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நுமன் ஷா
  • பேட்டர்கள் - செதிகுல்லா அடல், ஜுபைத் அக்பரி, நுவனிது ஃபெர்னாண்டோ, யசோதா லங்கா
  • ஆல்-ரவுண்டர் - கரீம் ஜானத் (கேப்டன்), ஷரபுதீன் அஷ்ரப், ரமேஷ் மெண்டிஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அல்லா கசன்ஃபர், எஷான் மலிங்கா, பிலால் சாமி

SL-A vs AFG-A Final Dream11 Prediction, Today Match SL-A vs AFG-A, SL-A vs AFG-A Dream11 Team, Sri Lanka A vs Afghanistan A, Fantasy Cricket Tips, SL-A vs AFG-A Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement