Advertisement

SL v AFG, 1st ODI: இலங்கையை 268 ரன்கலில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
SL v AFG, 1st ODI: Asalanka’s 91 has powered Sri Lanka to 268!
SL v AFG, 1st ODI: Asalanka’s 91 has powered Sri Lanka to 268! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2023 • 03:12 PM

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹம்பன்தோட்டாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மதீஷா பதிரானா, துசன் ஹமந்த ஆகியோர் அறிமுக வீரர்களாக சேக்கப்பட்டுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2023 • 03:12 PM

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பதும் நிஷங்காவும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - தனஞ்செய டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 51 ரன்களில் டி சில்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்காவும் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழண் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மெத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement