
SL vs AFG, 3rd ODI: Sri Lanka have bowled out Afghanistan for 116! (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களிலும், இப்ரஹிம் ஸத்ரான் 22 ரன்களிலும், ரஹ்மத் ஷா 7 ரன்களிலும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.