SL v AFG: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் சுழ்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதுகுப் பகுதியில் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களை தவறவிடுகிறார்.

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது. இப்போட்டி ஹம்பன்தோட்டாவில் நாளை காலை 10 மணிக்கு முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஃப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். எனினும், கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அணியில் சேருவார் என ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ரஷித் கான், மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் 2023 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய டாப் 3 பவுலர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now