Advertisement

இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 16, 2024 • 21:17 PM
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை தன்புளாவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், நிச்சயம் டி20 தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்கள் பிட்சியிலிருந்து திருப்பம் மற்றும் பிடியைப் பெற உதவுகிறது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டார் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறலாம். மேலும் இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 3 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 133 ரன்கள். இங்கு அதிகபட்ச ஸ்கோராக 141 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  •  மோதிய போட்டிகள் – 04
  • இலங்கை - 03
  • ஆஃப்கானிஸ்தான் - 01

நேரலை

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட் டென் 5 சேனலில் நேரலையில் காணலாம். அதேசமயம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

உத்தேச லெவன்

இலங்கை: குசால் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தசுன் ஷனகா, ஏஞ்சலோ மேத்யூஸ், வனிந்து ஹசரங்க (கேப்டன்), மகேஷ் தீக்‌ஷனா, மதிஷா பதிரனா, தில்ஷன் மதுஷங்கா, நுவான் துஷார.

ஆஃப்கானிஸ்தான்: இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, கரீம் ஜனத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், கைஸ் அகமது, நூர் அஹ்மத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ் (துணைக்கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் – சரித் அசலங்கா, இப்ராஹிம் சத்ரன்
  • ஆல்-ரவுண்டர் - ஏஞ்சலோ மேத்யூஸ், முகமது நபி, குல்பதின் நைப், வனிந்து ஹசரங்க (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர் – மதிஷா பதிரனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement