இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - சிங்கள விளையாட்டுக் கழக மைதானம், கொழும்பு
- நேரம் - காலை 10 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
சிங்கள விளையாட்டுக் கழக மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மதானமாகும். இலங்கையில் உள்ள அனைத்து மைதானங்களுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் அதில் தற்போது இம்மைதானமும் இணைந்துள்ளது. மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக போட்டியிட உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேரலை
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஃபேன் கோட் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.
உத்தேச லெவன்
இலங்கை: திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், நிஷான் மதுஷ்கா, தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா (கே), ரேமேஷ் மெண்டிஸ், கசுன் ராஜிதா, விஷ்வா ஃபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூரிய.
ஆஃப்கானிஸ்தான்: இப்ராஹிம் ஸத்ரான், நூர் அலி ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், நசீர் ஜமால், ஜியா உர்-ரஹ்மான் அக்பர், கைஸ் அகமது, ஜாஹிர் கான், நிஜாத் மசூத், யாமின் அஹ்மத்சாய்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: குசல் மெண்டிஸ்
- பேட்டர்ஸ்: ஏஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணாரத்னே, ஹஸ்மதுல்லா ஷாஹிதி, இப்ராஹிம் ஸத்ரன்
- ஆல்-ரவுண்டர்கள்: தனஞ்சய டி சில்வா, ஜியா உர்-ரஹ்மான் அக்பர், ரெமேஷ் மெண்டிஸ் (கேப்டன்)
- பந்து வீச்சாளர்கள்: யாமின் அஹ்மத்சாய், கைஸ் அஹ்மத், பிரபாத் ஜெயசூர்யா (துணை கேப்டன்)
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now