
SL vs BAN, 1st T20I: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர் முகமது நைம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் எமான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.