ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Mustafizur Rahman Record: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது வங்கதேசத்தின் நட்சத்திர பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இங்கிலாந்தின் ஆதில் ரஷீதின் சிறப்பு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடனும், மறுபக்கம் வங்கதேச அணி அடுத்தடுத்து தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆதில் ரஷீத்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முஸ்தஃபிசூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்த வடிவத்தில் தனது 136 சர்வதேச டி20 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுககளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் இங்கிலாந்தின் ஆதில் ரஷித்தை பின்னுக்கு தள்ளுவதுடன் 5ஆவது இடத்தையும் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் 127 போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அதேசமய்ம் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 107 டி20 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதீ 164 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- டிம் சௌதி - 164 விக்கெட்டுகள்
- ரஷீத் கான் - 161 விக்கெட்டுகள்
- ஷகிப் அல் ஹசன் - 149 விக்கெட்டுகள்
- இஷ் சோதி - 144 விக்கெட்டுகள்
- அதில் ரஷீத் - 135 விக்கெட்டுகள்
- முஸ்தஃபிசுர் ரஹ்மான் - 134 விக்கெட்டுகள்
இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பதிரான, நுவான் துஷார, பினுர ஃபெர்னாண்டோ, ஈஷான் மலிங்கா.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டி20 அணி: லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம் ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், ஷக் மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முகமது சைபுதீன்.
Win Big, Make Your Cricket Tales Now