Advertisement

இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 05, 2025 • 08:51 AM

வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 05, 2025 • 08:51 AM

இதனையடுத்து வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது. இதில் இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி கொழும்புவிலும், ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இதில் ஒருநள் மற்றும் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக கடந்த முறை டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காமல் இருந்த லிட்டன் தாஸ், எபோடட் ஹொசைன் உள்ளிட்டோருக்கும் இந்த டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுதவிர்த்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹசன் முராத், வலது கை வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா ஆகியோரும் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் விளையாடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் இஸ்லாம், வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் உள்ளிட்டோர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் பிஜோய், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் குமர் தாஸ், மஹிதுல் இஸ்லாம் பூயான், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் முராத், எபோடட் ஹொசைன் சவுத்ரி, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, சையத் கலீத் அகமது

Also Read: LIVE Cricket Score

இலங்கை - வங்கதேச டெஸ்ட் தொடர் அட்டவணை

  • ஜூன் 17-21, முதல் டெஸ்ட், காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலே
  • ஜூன் 25-29, 2வது டெஸ்ட், சிங்கள விளையாட்டுக் கழகம், கொழும்பு

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement