
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இன்று தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட, மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாசினார்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வநிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - ரிஷப் பந்த் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் ரிஷப் பந்த் நிதானமாக விளையாட, மறுமுனையில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 22 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 9 ரன்களுக்கும், ரியான் பராக் 7 ரன்களையும் மட்டுமே எடுத்து நிலையில் பதிரனா பந்துவீச்சில் அட்த்தடுத்து விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.