
அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ரன்களை குவித்தார். அதன்பின்னர் பால் ஸ்டர்லிங் மற்றும் கர்டிஸ் காம்பெர் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஸ்டர்லிங் 103 ரன்களையும், காம்ஃபெர் 111 ரன்களையும் குவிக்க, டக்கர் அவர் பங்கிற்கு 80 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் மதுஷ்கா மற்றும் கருணரத்னே இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 228 ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த கேப்டன் கருணரத்னே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க வீரர் மதுஷ்காவுடன் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸும் அபாரமாக பேட்டிங் செய்ய, இருவருமே இரட்டை சதமடித்தனர்.