
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதையடுத்து அணிகளுக்கும் இடையேயான இரானடாவது டெஸ்ட் போட்டியானது நாளை (செப்.26) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடி போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
மேலும் இப்போட்டியின் வெற்றி தோல்வி வைத்தே தொடரின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அரிவித்துள்ளது. மறுபக்கம் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நடைபெறும் என்று கணிக்கப்படுகிறது.