
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய லோக்கி ஃபெர்குசன், தனது இரண்டாவது ஓவரை வீசி முடித்த நிலையில் காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். இதனால் இப்போட்டியில் அவர் மேற்கொண்டு பந்துவீச முடியாமல் பெவிலியன் இருந்த அவர், மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.