Advertisement

SL vs ZIM, 1st T20I: சிக்கந்தர் ரஸா அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே; இலங்கைக்கு 144 ரன்கள் இலக்கு!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 14, 2024 • 20:45 PM
SL vs ZIM, 1st T20I: சிக்கந்தர் ரஸா அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே; இலங்கைக்கு 144 ரன்கள் இலக்கு!
SL vs ZIM, 1st T20I: சிக்கந்தர் ரஸா அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே; இலங்கைக்கு 144 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. 

அதன்படி இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கமுன்ஹுகாம்வே - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் எர்வின் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கமுன்ஹுகம்வே ஒரு பவுண்டரி, 2 சிச்கர்கள் என 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Trending


இதையடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 14 ரன்களுக்கும், ரியான் பர்ல் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுதியில் பிரையன் பென்னெட் 10 ரன்களையும், லுக் ஜோங்க்வா 13 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement