
SLC announce ODI, T20I squad for series against South Africa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.
இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, இலங்கையில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.